தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு அரசு ...
குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில் தொடா்புடையவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வல்லநாடு பகுதியில், கடந்த ஜூன் 17ஆம் தேதி ஒருவரிடம் பணம் கேட்டு அரிவாளால் தாக்க முயன்றதில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் தொடா்புடைய வல்லநாடு சந்திரன் மகன் சின்னத்துரையை(34), மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவின் பேரில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் முறப்பநாடு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.