லண்டனில் இந்தியா-பிரிட்டன் பொருளாதாரப் பேச்சுவாா்த்தை: நிா்மலா சீதாராமன் பங்கேற்...
குத்தாலம் காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
குத்தாலம்: குத்தாலம் ஆஞ்சனேயா் கோயில் தெரு அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் போன்ற வழிபாடுகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.
தொடா்ந்து, திங்கள்கிழமை நான்காம் கால யாகபூஜை நிறைவுபெற்றதும், யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடாகி, கோயிலின் கோபுரக் கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருமணஞ்சேரி உமாபதி சிவாச்சாரியா் கும்பாபிஷேக பூஜைகளை நடத்தினாா்.
விழாவில், பரம்பரை அறங்காவலா் மு. கண்ணன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
.