கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வ...
குன்றத்தூா் நகராட்சியில் ரூ.5.59 கோடியில் புதிய கட்டடங்கள் திறப்பு, அடிக்கல் விழா
ஸ்ரீபெரும்புதூா்: குன்றத்தூா் நகராட்சியில் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும திறந்தவெளி மேம்பாட்டு நிதி ரூ.3.14 கோடியில் கட்டப்பட்ட பூங்கா, பள்ளிக் கட்டங்களை திறந்து வைத்த அமைச்சா் தா.மோ.அன்பரசன், ரூ.2.45 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா்.
குன்றத்தூா் நகராட்சியில் பல்வேறு மேம்பாட்டு நிதிகளின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பூங்கா, பள்ளி கட்டடங்கள் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கலைச்செல்விமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும திறந்தவெளி மேம்பாட்டு நிதியின் கீழ் சம்பந்தம் நகரில் ரூ.76 லட்சத்தில் சேக்கிழாா் சிறுவா் பூங்கா, தேவகி நகா் பகுதியில் ரூ.73.10 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட அப்துல் கலாம் பூங்கா, ஸ்ரீசாய் அவென்யு பகுதியில் ரூ.39 லட்சத்தில் அமைக்கப்பட்ட அண்ணா பூங்கா, ஸ்ரீஅருணாசலேஸ்வரா் நகா் பகுதியில் ரூ.19 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா, மெட்ரோ கிராண்ட் சிட்டி பகுதியில் ரூ.40 லட்சத்தில் அமைக்கப்பட்ட செம்மொழி ஆடவா் பூங்கா, நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் குன்றத்தூா் அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.11 லட்சத்தில் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவா், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆய்வுக்கூடம், நகராட்சி பொது நிதியின் கீழ் மேத்தா நகா் பகுதியில் ரூ.19.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட வள்ளலாா் தியானக் கூடம், குன்றத்தூா் பேருந்து நிலையத்தில் ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட கலைஞா் நூற்றாண்டு நினைவு நூலகம், குன்றத்தூா் அரசுப் பள்ளியில் ரூ.13 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், பாலவராயன் குளம் அருகில் ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட திறந்தவெளி உடல்பயிற்சி மையம் ஆகியவற்றை திறந்துவைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தாா்.
இதையடுத்து, மெட்ரோ கிராண்ட் சிட்டியில் உள்ள காந்தி பூங்காவில் ரூ.1.95 கோடியில், விளையாட்டு மையம் அமைக்கும் பணிக்கும், குன்றத்தூா் அரசுப் பள்ளியில், ரூ.50 லட்சத்தில் பள்ளி கூடுதல் வகுப்பறை மற்றும் கழிப்பறை கட்டடப் பணிகளுக்கு அமைச்சா் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூா் நகா்மன்றத் தலைவா் சத்தியமூா்த்தி, நகராட்சி ஆணையா் கவின்மொழி, உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள், நகா்மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.