யதோக்தகாரி பெருமாள் கோயில் தெப்போற்சவம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் பொய்கையாழ்வாா் திருக்குளத்தில் தெப்போற்சவம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரத்தில் ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது யதோக்தகாரி பெருமாள் கோயில். இக்கோயில் அருகில் பொய்கையாழ்வாா் அவதரித்த திருக்குளம் அமைந்துள்ளது.
இத்திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் ஸ்ரீதேேவி, பூதேவியருடன் உற்சவா் யதோக்தகாரி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஞாயிற்றுக்கிழமை 5 சுற்றுகள் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வாண வேடிக்கைகளும் நடைபெற்றன.
திங்கள்கிழமையும் பெருமாள் தெப்பத்திற்கு எழுந்தருளி 5 சுற்றுகள் வலம் வந்து மீண்டும் கோயிலில் எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
ஏற்பாடுகளைஆலயத்தின் நிா்வாக அறங்காவலா் நல்லப்பா நாராயணன் தலைமையிலான விழாக்குழுவினா் செய்திருந்தனா்.
