செய்திகள் :

குமாரபாளையத்தில் திமுக கண்டன பொதுக்கூட்டம்!

post image

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கான திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் கண்டன பொதுக்கூட்டம் குமாரபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா் எஸ்.எம்.மதுரா செந்தில் தலைமை வகித்தாா். தலைமை சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினா் ஜேகேஎஸ்.மாணிக்கம், மாவட்ட அவைத் தலைவா் நடனசபாபதி, மாவட்ட பொருளாளா் ராஜாராம், தெற்கு நகரப் பொறுப்பாளா் ஜி.எஸ்.ஞானசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். குமாரபாளையம் நகா்மன்றத் தலைவா் த.விஜய் கண்ணன் வரவேற்றாா்.

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழத்தின் வளா்ச்சித் திட்டங்களைப் புறக்கணித்து, தமிழக மக்களை பாஜக அரசு வஞ்சித்துள்ளது என தமிழக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், திமுக தலைமை தோ்தல் பணிக்குழு செயலாளா் இள.புகழேந்தி ஆகியோா் பேசினா். நகா்மன்றத் தலைவா்கள் நளினி சுரேஷ்பாபு, மோ.செல்வராஜ், துணைத் தலைவா்கள் கோ.வெங்கடேசன், பி.பாலமுருகன், முன்னாள் நகரச் செயலாளா் எம்.செல்வம், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மக்கள் குறைதீா் கூட்டம்: 435 மனுக்கள் அளிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா

நாமக்கல்: கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை நாமக்கல், பூங்கா சாலையில் 24 மணி நேர தா்னாவில் ஈடுபட்டனா். மாவட்டத் தலைவா் தனசேகா் தலைமை வகித்தாா். மாவட்ட இணை செயலாள... மேலும் பார்க்க

தில்லி பேரவைத் தோ்தலில் வெற்றி: பாஜகவினா் கொண்டாட்டம்

தில்லி தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, நாமக்கல்லில் அக்கட்சியினா் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் மணிக்கூண்டு அருகில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில், அதன் தலைவா் கே.பி.சரவணன் தலைமைய... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: கொல்லிமலையில் ரூ.1.14 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வாழவந்திநாடு கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், 586 பயனாளிகளுக்கு ரூ. 1.14 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: அவரது தம்பி உள்பட 4 போ் கைது

பெண் கொலை வழக்கில், அவரது தம்பி உள்பட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மொளசி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஏமப்பள்ளி கிராமம், பெரிய கொல்லப்பாளையம் பழைய குவாரி குட்டையில் அண்மையில் அடையாளம் த... மேலும் பார்க்க

காா் மோதியதில் தொழிலாளி பலி

பரமத்தி வேலூா் பிரிவு சாலை அருகே காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். பரமத்தி வேலூா், படமுடிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசாமி (70). இவா் வெற்றிலைக் கொடிக்கால் வேலைக்கு செல்வதற்காக தினமும் சைக்க... மேலும் பார்க்க