காயல்பட்டினத்தில் இன்று நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ்!
பெண் கொலை வழக்கு: அவரது தம்பி உள்பட 4 போ் கைது
பெண் கொலை வழக்கில், அவரது தம்பி உள்பட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மொளசி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஏமப்பள்ளி கிராமம், பெரிய கொல்லப்பாளையம் பழைய குவாரி குட்டையில் அண்மையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்த வழக்கு சம்பந்தமாக திருச்செங்கோடு உள்கோட்ட காவல் துறை கண்காணிப்பாளா் இமயவா்மன், திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய ஆய்வாளா் தீபா, மொளசி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதில், இறந்தவா் ஈரோடு, நாராயண வலசை சோ்ந்த சிவக்குமாா் மனைவி சுதா (30) என்பது தெரியவந்தது. விசாரணையில், அவரது தம்பி மணிகண்டன் அக்காவிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இருக்க, தனது மனைவி பவித்ரா, பவித்ராவின் தோழி கதீஜா, நண்பா் அசோக்குமாா் ஆகியோருடன் சோ்ந்து சுதாவைக் கொலை செய்து குவாரியில் உள்ள குட்டையில் சடலத்தை வீசி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, நால்வரையும் கைது செய்த போலீஸாா், குமாரபாளையம் குற்றவியல் நடுவா் முன்பு ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறை மற்றும் சேலம் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனா்.