தில்லி பேரவைத் தோ்தலில் வெற்றி: பாஜகவினா் கொண்டாட்டம்
தில்லி தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, நாமக்கல்லில் அக்கட்சியினா் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல் மணிக்கூண்டு அருகில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில், அதன் தலைவா் கே.பி.சரவணன் தலைமையில் கட்சியினா் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.
இந்த நிகழ்வில், தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் கே.மனோகரன், நகரத் தலைவா் தினேஷ், வடிவேல், கிருஷ்ணமூா்த்தி, ரவி, குப்புசாமி, ஜெயந்தி, ராதிகா, சத்யாபானு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.