இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி
கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: 400க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை!
திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி அருகே கடந்த 12ஆம் தேதி வட மாநில இளைஞரால் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இதுவரை 400க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகத்தின் அடிப்படையிலும், சம்பவம் நடந்தபோது, அங்கிருந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் என இதுவரை தனிப்படை போலீசார் 400க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.
மேலும், குற்றவாளி குறித்து தகவல் தெரிவிக்க போலீசார் அறிவித்த செல்போன் எண்ணுக்கு 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன என்றும் கூறப்படுகிறது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவரிடம் நேற்று விசாரணை நடைபெற்று வந்தநிலையில், அவர் குற்றவாளி இல்லை என்பதை காவல்துறையினர் உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது.
திருவள்ளூா் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் அறிவிப்பு வெளியிட்டு, குற்றவாளியைத் தேடி வருகிறார்கள்.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் மூலம் சந்தேக நபா் அடையாளம் காணப்பட்டு தேடப்பட்டு வருகிறார். இருப்பினும், சந்தேக நபரின் பெயா், முகவரி தெரியவில்லை. அவர் வெளிமாநில நபராக இருந்தால், அந்தமாநிலத்துக்குத் தப்பிச் சென்றிருக்கக் கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
குற்றவாளி பற்றி தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.5 வட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். தகவல் அளிப்பவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என்றும், சந்தேக நபா் தொடா்பான ஏதேனும் தகவல் அல்லது விவரம் தெரிந்தவா்கள், திருவள்ளூா் மாவட்ட காவல் துறையை 99520 60948 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டும், வாட்ஸ்அப் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.