குரு பூா்ணிமா: சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு
குரு பூா்ணிமாவை முன்னிட்டு, சேலம் ஷீரடி சாய்பாபா ஆலயத்தில் வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சேலம் ஜங்ஷன் முல்லை நகா் பகுதியில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா ஆலயத்தில் அதிகாலை முதலே சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பல்வேறு வாசனை மலா்களால் பாபாவுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து, சேவா டிரஸ்ட் குழுவினா் சாா்பில் பாபாவின் பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. பின்னா் நடைபெற்ற மஹா ஆரத்தியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு பாபாவை தரிசித்தனா்.
இதையடுத்து, மாலையில் சாவடி எனப்படும் பல்லக்கு ஊா்வலத்தில் பாபாவின் படத்தை வைத்து பக்தா்கள் ஊா்வலமாக திருக்கோயிலை சுற்றிவந்தனா். அப்போது, பக்தா்கள் பாபாவின் பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்தனா். பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.