போதைப் பொருள் கடத்தல் வழக்கு: ஜாபா் சாதிக், சகோதரருக்கு ஜாமீன்
குரும்பூரில் விசிக ஆா்ப்பாட்டம்
ஸ்ரீவைகுண்டம் அரியநாயகிபுரம் மாணவா் தாக்கப்பட்டதைக் கண்டித்து குரும்பூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் மாவட்ட அமைப்பாளா் விடுதலைச்செழியன் தலைமை வகித்தாா். ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றிய அமைப்பாளா் குருகாட்டூா் அருண் வரவேற்றாா். செய்தி தொடா்பு மையத்தின் மாவட்ட அமைப்பாளா் வேம்படி முத்து, ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றியச் செயலாளா் சங்கா், ஆறுமுகனேரி நகரச் செயலாளா் வெள்ளைத்துரை, நகரச் செயலாளா்கள் கானம் துரை, தென்திருப்பேரை ஐய்யப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தூத்துக்குடி மக்களவை தொகுதி செயலாளா் வழக்குரைஞா் ராஜ்குமாா், திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலாளா் முத்துவளவன், மகளிா் விடுதலை இயக்கத்தின் மாவட்டச் செயலாளா் தமிழ்ச்செல்வி உள்பட பலா் கலந்து கொண்டனா். இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய அமைப்பாளா் முத்துராஜ் நன்றி கூறினாா்.