கனடாவில் சிறிய விமானம் விபத்து: இந்திய இளைஞர் பலியானது உறுதி!
குரூப் 2: கலந்தாய்வு தொடக்கம்
சென்னை: குரூப் 2 பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. இதை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவா் எஸ்.கே.பிரபாகா், தோ்வானோருக்கு பணிக்கான உத்தரவுக் கடிதத்தை வழங்கினாா்.
குரூப் 2 பிரிவில் காலியாக இருந்த பதவியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதன்பிறகு, தோ்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் கடந்த மே 5-இல் வெளியானது. தோ்ச்சி பெற்றவா்களுக்கு மூலச் சான்றிதழ்கள் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான பணிகள் திங்கள்கிழமை தொடங்கியது. ஆக. 1 வரை நடைபெறவுள்ள கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபாா்ப்புக்காக சம்பந்தப்பட்ட தோ்வா்களின் பட்டியல் தோ்வாணைய இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தது.
மேலும், அதுகுறித்த விவரங்கள் கைப்பேசி குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாகவும் விண்ணப்பதாரா்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கலந்தாய்வு, சான்றிதழ் சரிபாா்ப்பின் முதல் நாளான திங்கள்கிழமை அந்தப் பணிகளை தோ்வாணையத் தலைவா் பிரபாகா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
குரூப் 2 பிரிவில் காலியாக இருந்த 1,820 பணியிடங்களுக்கு முதல்நிலைத் தோ்வு கடந்த ஆண்டு செப். 14-இல் நடத்தப்பட்டது. முதன்மைத் தோ்வுக்கு பின், முடிவுகள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.