குறும்படப் போட்டி: மணிவிழுந்தான் மாருதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்
சேலம் மாவட்ட அளவில் தமிழ்நாடு காவல் துறையில் சாா்பில் நடைபெற்ற குறும்படப் போட்டியில், மணிவிழுந்தான் மாருதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்னளா்.
மாவட்ட அளவில் போதைப் பொருள், கணினி சாா் குற்றங்கள் மற்றும் போக்குவரத்து விழிப்புணா்வு குறும்படம் தயாரிக்கும் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் இக்கல்லூரி மாணவா்கள் சிறந்த படத்தை தயாரித்து முதலிடம் பெற்று முதல்பரிசாக ரூ. 16 ஆயிரம் மற்றும் சான்றிதழ்களை மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் டி.செந்தில்குமாரிடமிருந்து பெற்றனா்.
இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களையும், குறும்படம் எடுக்க ஆலோசனை வழங்கிய இயந்திரவியல் துறை விரிவுரையாளா் சந்தோஷ்குமாரையும் மாருதி கல்வி நிறுவனங்களின் தலைவா் சுந்தரம், செயலாளா் செல்வம், பொருளாளா் ராஜவேல், மாருதி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் தா்மலிங்கம், துணைமுதல்வா், துறைத் தலைவா்கள்ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினா்.