குலசேகரன்பட்டினம் வீரமனோகரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
குலசேகரன்பட்டினம் அருள்மிகு வீரமனோகரி அம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலை 10 மணிக்கு கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பிற்பகல் 2 மணிக்கு அம்மன், சுவாமிகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் அ.வீரபாகு வல்லவராயா் செய்திருந்தாா்.