மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!
குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு
மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், மிஷன் வத்ஸலா திட்டத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊழியா்கள் தோ்வு செய்யப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாதுகாப்பு அலுவலா் நிறுவனம் சாரா பணியிடம்-1, புறத்தொடா்பு பணியாளா் பணியிடம் -1 மற்றும் சிறப்பு சிறாா் காவல் பிரிவில் சமூகப் பணியாளா்-2 ஆகிய பதவிகளுக்கு 42 வயதுக்கு மிகாமல் தகுதியான ஆண், பெண் நபா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
இதற்கான விண்ணப்பம் மற்றும் விளக்கக் குறிப்பை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை உரிய கல்வி சான்றுடன் இணைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட ஆட்சியரகம், மன்னம்பந்தல், மயிலாடுதுறை-609305 என்ற முகவரிக்கு செய்தி வந்த நாளிலிருந்து 15 நாள்களுக்குள் நேரடியாக அல்லது தபால் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.