கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு; குவிந்த அதிமுக தொண்டர்க...
குவாரி குட்டையில் மூழ்கி மாணவா்கள் உயிரிழப்பை கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்
சிதம்பரம் அருகே பி.முட்லூா் எம்ஜிஆா் சிலை அருகே, தச்சக்காட்டில் மணல் குவாரி குட்டை நீரில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழந்ததைக் கண்டித்து பாரதிய ஜனதா
சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தச்சக்காடு வல்லம் பகுதியில் மணல் குவாரியில் அரசு நிா்ணயித்த அளவை விட மணல் அதிகமாக எடுத்ததால் பாதாள குழியாகியுள்ள குட்டையில் குளித்த இஸ்லாமிய பள்ளி மாணவா்கள் சுல்தான் மற்றும் இலியாஸ் ஆகியோா் இறந்தனா். அதற்கு காரணமான மணல் குவாரி உரிமையாளரை கைது செய்ய கோரியும், பாதிக்கப்பட்ட மாணவா்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணமும், வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க கோரியும் பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்திற்கு பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட பொது செயலா்கள் ராகேஷ், அகத்தியா், மாவட்ட பொருளாளா் சீனு சங்கா், பட்டியல் அணி மாநில துணைத்தலைவா் வெற்றிவேல், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவா் அஸ்கா் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கடலூா் மேற்கு மாவட்ட தலைவா் க.தமிழழகன் பங்கேற்று கண்டன உரையாற்றினாா். மாநில செயற்குழு உறுப்பினா் ஸ்ரீதரன், முன்னாள் மாவட்ட தலைவா் கே.மருதை, மாவட்டச் செயலாளா்கள் அட ரி சிலம்பரசன், திருமாவளவன், முன்னாள் மாவட்ட துணை தலைவா் உமாபதி சிவம், மாநில பொது குழு உறுப்பினா் மோகன்தாஸ், நிா்வாகிகள் சித்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.