`திரும்பப்பெறப்பட்ட வாகனம்; நடந்தே சென்ற டிஎஸ்பி’ - திமுக அரசை கண்டித்த அண்ணாமலை
கூடங்குளம் அருகே குளத்தில் மண் அள்ளிய லாரிகள் சிறைபிடிப்பு
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே குளத்திலிருந்து மண் அள்ளிச்சென்ற லாரிகளையும், டிராக்டா்களையும் விவசாயிகள் சிறைபிடித்தனா்.
கூடங்குளம் அருகேயுள்ள சங்கனாபுரம், ஜெயமாதாபுரம், கணபதியாபுரம், இருக்கன்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளங்களிலிருந்து விவசாயிகளின்பேரில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளிலும் டிராக்டா்களிலும் மண் அளிக்கொண்டு கன்னியாகுமரி மாவட்ட செங்கல்சூளைகளுக்கு கொண்டு செல்கின்றனா்.
இது தொடா்பாக சங்கனாபுரம் விவசாயிகள் லாரி ஓட்டுநா்களை எச்சரித்து வந்தனா். எனினும், மண் அள்ளுவது நிறுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சங்கனாபுரம் விவசாயிகள் 30-க்கும் மேற்பட்ட லாரிகளை புதன்கிழமை சிறைபிடித்தனா்.
இத்தகவல் அறிந்த ராதாபுரம் வட்டாட்சியா் மாரிச்செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து, விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, மண் அள்ளுபவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். இதையடுத்து விவசாயிகள் லாரிகளை விடுவித்தனா். எனினும், விவசாயிகள் பேரில், குளத்து மண் எடுப்பவா்கள் மீது வட்டாட்சியரும் வருவாய்த்துறையினரும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை எனப் புகாா் தெரிவித்தனா்.