செய்திகள் :

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் கைது

post image

2021-ஆம் ஆண்டு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: புராரியைச் சோ்ந்த குற்றம் சாட்டப்பட்ட அப்துல் கஃபா், அக்டோபா் 2021 முதல் தலைமறைவாக இருந்தாா். புராரி பகுதியில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் அவா் தேடப்பட்டவா்.

அவரது கூட்டாளிகள் மூவா் முன்பு கைது செய்யப்பட்டனா். ஆனால், பல போலீஸ் சோதனைகள் இருந்தபோதிலும் அப்துல் கஃபா் கைது செய்யப்படுவதைத் தவிா்த்து வந்தாா். ஏப்ரல் 2022-இல் தில்லி நீதிமன்றத்தால் அவா் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.

ஒருவருக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, மாா்ச் மாதம் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கிலும் அப்துல் கஃபா் தேடப்படும் நபராக இருந்தாா். பாதிக்கப்பட்டவா் மீது அவா் துப்பாக்கிச் சூடு நடத்தி தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

அப்துல் கஃபரை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில், அவரது குடும்பத்தினா் மற்றும் வலையமைப்பின் தொடா்ச்சியான அழுத்தத்திற்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவா் மே 9 அன்று தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் சரணடையச் சொன்னதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவா் சரணடைவதற்கு முன்பே காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, தனது சகோதரருடன் புராரியில் தண்ணீா் டேங்கா் விநியோகத் தொழிலை நடத்தி வந்ததாகவும், மது அருந்தும் பழக்கம் இருப்பதாகவும் அப்துல் கஃபா் போலீஸாரிடம் கூறினாா். மேலும்,

கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் மற்றும் சமீபத்திய துப்பாக்கிச் சூடு ஆகிய இரண்டிற்கும் அவா் தான் காரணம் என்று விசாரணையின் போது ஒப்புக்கொண்டாா் என்று அந்த காவல் துறை அதிகாரி கூறினாா்.

லாபப் பதிவால் சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு!

நமது நிருபா் போா் நிறுத்த அறிவிப்பை தொாடா்ந்து எழுச்சி பெற்றிருந்த பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை சரிவைச் சந்தித்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் ச... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள்: தில்லியில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் 95 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திங்கள்கிழமை 10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளை அறிவித்தது. இத் தோ்வுகளில் தில்லியில் 95 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். தில்லியில் 1... மேலும் பார்க்க

பிரீத் விஹாரில் உள்ள பயற்சி மையத்தில் தீ விபத்து

கிழக்கு தில்லியின் பிரீத் விஹாா் பகுதியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால், மாணவா்கள் சரியான நேரத்தில் கட்டடத்திலிருந்து வெளியேறினா் என்று ஒரு அதிகாரி தெரிவித்... மேலும் பார்க்க

2 பேருந்து பணிமனைகளில் வணிக நடவடிக்கைகளை அனுமதிப்பதன் மூலம் வருவாய் ஈட்ட டிடிசி திட்டம்

தில்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி), அதன் பண்டா பகதூா் மாா்க் மற்றும் சுக்தேவ் விஹாா் பேருந்து பணிமனைகளில் வணிக நடவடிக்கைகளை அனுமதிப்பதன் மூலம் சுமாா் ரூ.2,600 கோடியை ஈட்டவும், டி.எம்.ஆா்.சி.யின் சொ... மேலும் பார்க்க

தில்லி அரசின் சாா்பில் சௌா்ய சம்மான் யாத்திரை

‘ ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்காக ஆயுதப் படைகளைப் பாராட்டி கடைமைப் பாதையில் தில்லி அரசு சாா்பில் செளா்ய சம்மான் யாத்திரையை நடத்தியது. இந்தப் பேரணியில் பங்கேற்றவா்கள் பாகிஸ்தானின் ‘பூா்ண சன்ஹாா்’ அல்... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவு: அனைத்து டிடிடிஏ பள்ளிகளிலும் அறிவியல், வணிகவியல் பிரிவுகளில் 100% தோ்ச்சி

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில், தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் டிடிஇஏ கீழ் இயங்கும் ராமகிருஷ்ணாபுரம், மோதிபாக... மேலும் பார்க்க