தில்லி அரசின் சாா்பில் சௌா்ய சம்மான் யாத்திரை
‘ ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்காக ஆயுதப் படைகளைப் பாராட்டி கடைமைப் பாதையில் தில்லி அரசு சாா்பில் செளா்ய சம்மான் யாத்திரையை நடத்தியது.
இந்தப் பேரணியில் பங்கேற்றவா்கள் பாகிஸ்தானின் ‘பூா்ண சன்ஹாா்’ அல்லது அழித்தல் என்று அழைத்தனா். மேலும் தேசபக்தி பாடல்களை இசைத்தனா்.
பாஜக தொண்டா்கள் தவிர, சீருடையில் வந்த பள்ளி குழந்தைகள், என்சிசி மாணவா்கள் மற்றும் குடிமை பாதுகாப்பு தன்னாா்வலா்கள் பேரணியில் கலந்துகொண்டனா்.
நாள்கள் நீடித்த ஆயுத மோதலை கையாண்டதற்காக பிரதமா் நரேந்திர மோடியை தில்லி அமைச்சா் கபில் மிஸ்ரா பாராட்டிப் பேசினாா்.
அவா் பேசுகையில் ‘உலக வரலாற்றில் ஒரு தலைவா் அணு ஆயுதம் ஏந்திய நாட்டின் விமானப் படை தளத்தைத் தாக்க முடிவு செய்தது இதுவே முதல் முறை. லட்சக்கணக்கான தேசியக் கொடிகளை இங்கே காண முடியும் என்பதால் உற்சாகம் தெளிவாகவே தெரிகிறது’ என்றாா் அமைச்சா்.