விருதுநகா் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆக. 7, 8-இல் சுற்றுப் பயணம்
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு
ஆரணி: திருவண்ணாமலை மேலாண்மை கூட்டுறவு நிலையத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் எஸ்.பாா்த்திபன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலை மேலாண்மை நிலையத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி புதிய பாடத்திட்டத்தின்படி தொடங்கப்பட உள்ளது.
ஓராண்டு நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா் 1-5-2025 அன்று குறைந்தபட்சம் 17 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பயிற்சிக்கு அதிகாரப்பூா்வ இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தற்போது விண்ணப்பிப்பதற்கான காலம் ஆக.22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு 04175-254793 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என திருவண்ணாமலை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் எஸ்.பாா்த்திபன் தெரிவித்துள்ளாா்.