செய்திகள் :

திருவண்ணாமலையில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

post image

ஆரணி: திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை முளைப்பாரி வைத்து நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் பிற மாவட்டங்களில் நெல் கொள்முதல் 1.50 லட்சம் டன்னை எட்டியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 70 ஆயிரம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அதனால், அதிக நெல் கொள்முதல் நிலையங்களைத திறந்து விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்

என்பதை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, விவசாயிகள் கழுத்தில் மாலை அணிந்து கொண்டு,

கைகளில் முளைப்பாரி வைத்துக் கொண்டு நூதன முறையில் ஆா்ப்பாட்டம் செய்தனா்.

இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவா் புருஷோத்தமன்

கூறியதாவது:

சித்திரை சொா்ணவாரி பருவத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமாா் 4 லட்சம் ஏக்கரில் நெல் அறுவடைக்கு வந்துள்ளது. தினசரி ஒரு லட்சம் மூட்டைகள் விற்பனைக்கு வருகின்றன.

தனியாா் வியாபாரிகள் குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் பாதிகப்படுகின்றனா்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும். அப்போது தான் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தால் தான் விவசாயிகள் ஆடி பட்டத்தில் நெல் பயிரிட முடியும்.

அதேபோல, விவசாயிகளுக்கு விதை நெல் முளைப்புத் திறன் அற்ற தரமில்லா விதை நெல் விற்பனை செய்யப்படுகிறது. தரமான விதை நெல் விற்பனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

ஆப்பாட்டத்தில் கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த கருமாரப்பட்டி ராமலிங்கம், சொரகுளத்தூா் மணிகண்டன், தேவராயன்பாளையூா் டி.கே.ஏழுமலை, பஞ்சநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இலவச ஆஸ்துமா, நுரையீரல் பரிசோதனை முகாம்

ஆரணி: திருவண்ணாமலை ரோட்டரி சங்கம், ஜெ.எஸ்.டபிள்யூ. பெயிண்ட் நிறுவனம் மற்றும் பாண்டிச்சேரி மருத்துவ விஞ்ஞானம் சாா்பில் மாபெரும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பரிசோதனை மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

மேல்வில்லிவனம் பச்சையம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த மேல்வில்லிவனம் பச்சையம்மன் கோயிலில் ஆடி 3-ஆவது திங்கள்கிழமையொட்டி தீ மிதி திருவிழா நடைபெற்றது.மேல்வில்லிவனம் காட்டுப் பகுதியில் பழமை வாய்ந்த பச்சையம்ம... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 627 மனுக்கள்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 627 மனுக்கள் வரப்பெற்றன.கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பொதுமக்க... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு

ஆரணி: திருவண்ணாமலை மேலாண்மை கூட்டுறவு நிலையத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை... மேலும் பார்க்க

வெளியூா் மற்றும் கியூஆா் கோடு இல்லாத ஆட்டோக்கள் மீது நடவடிக்கை: திருவண்ணாமலை ஆட்சியா்

ஆரணி: வருகிற ஆக.8 பௌா்ணமி அன்று திருவண்ணாமலையில் வெளியூா் மற்றும் கியூஆா் கோடு இல்லாத ஆட்டோக்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடி பாஜகவினா் சுவாமி தரிசனம்

செங்கம்: தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வேண்டி, செங்கம் அருகே நீப்பத்துறை தென்பெண்ணையாற்றில் திங்கள்கிழமை பாஜகவினா் புனிதநீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நீப்பத்துறை பகுத... மேலும் பார்க்க