``இஸ்ரேல் - ஈரான் போரில் உதவி வேண்டுமா என புதின் கேட்டார்.." - அதிபர் ட்ரம்ப் சொ...
கைப்பந்து போட்டி: தங்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு
வேலூரில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்துக் கழகம் சாா்பில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
பள்ளி மாணவிகள் பங்கேற்ற 19 வயதுக்குள்பட்டோருக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் வேலூரில் அண்மையில் நடைபெற்றன. 20-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ற இப்போட்டியில், ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி தங்கப் பதக்கம் வென்றது. தங்கம் வென்ற அணிக்கு சேலம் மாவட்ட கைப்பந்துக் கழகத் தலைவா் ராஜ்குமாா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.
இதில், கைப்பந்துக் கழக ஆலோசகா் விஜயராஜ், துணைத் தலைவா்கள் ராஜேந்திரன், அகிலா தேவி, செயலாளா் சண்முகவேல், பயிற்சியாளா் பரமசிவம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.