முசோலினி vs Hitler-ன் சண்டைக்கு காரணம் இதுதானா? | Mussolini Web series #18
கொசோவோ நாட்டில் புதிய நாடாளுமன்றத் தேர்தல்!
வடகிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவோவில் இன்று (பிப்.9) புதிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த 2008 ஆம் ஆண்டு கொசோவோ நாடு சுதந்திரம் அடைந்த பின்பு நடத்தப்பட்ட தேர்தல்களின் மூலம் உருவான அரசுகளில் 2021 ஆம் ஆண்டு தேர்தலின் மூலம் அமைந்த அரசு தான் முதல் முறையாக அதன் 4 ஆண்டு ஆட்சி காலத்தை முழுவதுமாக முடித்துள்ளது.
கடந்த 1998-99 ஆம் ஆண்டு காலத்தில் செரிபிய அரசுக்கும் பூர்வீக அல்பேனிய பிரிவிணைவாதிகளுக்கும் இடையில் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்ததிலிருந்து அந்நாட்டில் நடைபெறும் 9வது நாடாளுமன்றத் தேர்தல் ஆகும்.
இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையில் வெற்றியடைந்த தற்போதைய பிரதமர் அல்பின் குர்தியின் ஆளும் கட்சிக்கு இந்த தேர்தல் ஓர் முக்கிய சிம்மசொப்பனமாக திகழும் எனக் கூறப்படுகிறது.
இடது சாரி அமைப்பான பிரதமர் குர்தியின் செல்ஃப் டிடர்மினேஷன் பார்ட்டி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டாலும் கடந்த தேர்தலைப் போல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: காஸாவிலிருந்து விடுவிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டினர் தாயகம் திரும்பினர்
இந்த தேர்தலில் சுமார் 20 லட்சம் வாக்காளர்கள் அந்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 941 வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கவுள்ளனர். அவர்கள் 27 அரசியல் குழுக்களைச் சேர்ந்த சுமார் 600 வேட்பாளர்களில் 120 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவுள்ள நிலையில் இதில் ஒரு சுயேச்சை வேட்பாளரும் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொசோவோவில் 20 தொகுதிகள் அந்நாட்டின் சிறுபான்மனையினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக 10 தொகுதிகள் செரிபிய சிறுபான்மையினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
வெளி நாடுகளில் வாழும் சுமார் 1 லட்சம் கொசோவோ நாட்டு குடிமக்களில் 20,000க்கும் மேற்பட்டோர் நேரடியாக உலகெங்கும் அமைக்கப்பட்டுள்ள 43 தூதரகங்களின் மூலம் வாக்களிக்கவுள்ள நிலையில் மீதமுள்ள வாக்காளர்கள் தபால் வாக்குகள் செலுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2008 ஆம் ஆண்டு செரிபியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்று தனிக்குடியரசாக உருவாகிய கொசோவோ நாட்டை ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் 104 நாடுகள் அங்கீகரித்துள்ளன. ஆனால், கொசோவோவை இந்தியா அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.