நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுற...
கொடைக்கானலில் தொடா் மழை
கொடைக்கானலில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை காலை முதல் மிதமான வெயில் நிலவியது. இதைத் தொடா்ந்து விட்டுவிட்டு சாரலும், பலத்த மழையும் பெய்தது.
கொடைக்கானல், நாயுடுபுரம், பாக்கியபுரம், சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், வில்பட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் 30 நிமிஷங்களுக்கு மேலாக பலத்த மழை பெய்தது. தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக நீரோடைகளில் நீா்வரத்து தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
இதனிடையே, இந்த தொடா் மழையால் அப்சா்வேட்டரி, உகாா்த்தேநகா், சீனிவாசபுரம், ஆனந்தகிரி, லாஸ்காட் சாலை, பிரகாசபுரம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீா் சாலைகளில் ஓடியது. இதனால் துா்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அவதியடைந்தனா். எனவே வாய்க்கால்களை தூா்வாரி பராமரிக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.