கொடைக்கானல் ஏரிச் சாலையில் மழை நீா் தேங்கியதால் அவதி
கொடைக்கானல் ஏரிச் சாலையில் தேங்கியுள்ள மழை நீரால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக தொடா் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நகரின் மையப் பகுதியான ஏரிச் சாலையில் மழை நீா் பல நாள்களாகத் தேங்கிக் கிடக்கிறது. ஏரியில் படகு சவாரி செய்வதற்கும் ஏரிச் சாலையைச் சுற்றி சைக்கிள், குதிரை சவாரி, நடைபயிற்சி ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகளும், பொது மக்களும் அதிகளவில் வருகின்றனா். தற்போது தேங்கியுள்ள மழை நீரால் வாகனங்களில் செல்வதில் சிரமம் ஏற்படுவதோடு, சுற்றுலாப் பயணிகளும் அவதிப்பட்டு வருகின்றனா். இதை அகற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.