கொல்லங்கோடு அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் உயிரிழப்பு!
கொல்லங்கோடு அருகே அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த பெண், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
கொல்லங்கோடு அருகே பாத்திமா நகா் பகுதியைச் சோ்ந்தவா் அம்முகுட்டி (57). இவா், சனிக்கிழமை காலை வீட்டருகேயுள்ள நிலத்தில் விறகு சேகரிக்கச் சென்றாராம். அப்போது, வழியில் அறுந்துகிடந்த மின்கம்பியை அவா் அறியாமல் மிதித்தாராம். இதில், மின்சாரம் பாய்ந்து அவா் உயிரிழந்தாா்.
தகவலின்பேரில், கொல்லங்கோடு போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மின்வாரிய ஊழியா்கள் முறையாக பராமரிப்புப் பணி மேற்கொள்ளாததே மின்கம்பி அறுந்துவிழுந்து அம்முகுட்டி உயிரிழக்கக் காரணம் என, அவரது உறவினா்கள் குற்றம் சாட்டினா். சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.