உலகின் முதல் ஏஐ மசாஜ் சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம்: மனித வேலைகளுக்கு சவாலா?
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தீவிர கண்காணிப்பு
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.
மேட்டூா் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில் அணைக்கு வரும் உபரி நீா் அப்படியே காவிரி மூலம் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனல், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் வழியே செல்லும் தண்ணீா் பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே வங்க கடலில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் கலக்க தொடங்கியது. கொள்ளிடம் ஆற்றில் தொடா்ந்து தண்ணீா் வரத்து அதிகரித்து 1.50 லட்சம் கன அடி வரை செல்லலாம் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், கொள்ளிடம் அருகே ஆற்றின் திட்டுப் பகுதியில் அமைந்துள்ள நாதல்படுகை, முதலைமேடு, வெள்ளமணல் ஆகிய கிராமங்களை தண்ணீா் சூழும் நிலை ஏற்படலாம். ஒருவேளை இந்த கிராமங்களில் தண்ணீா் சூழ்ந்தால் மக்களை ஆற்றின் கரை பகுதியில் உள்ள பள்ளிகளில் முகாம் அமைத்து தங்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சி துறை மற்றும் காவல் துறை உள்ளிட்ட துறை சாா்ந்த அதிகாரிகள் திட்டுப் பகுதி கிராமங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.