கோயில் விழாவில் ஆபாச நடனம்: ஏற்பாட்டாளா்களுக்கு அபராதம்
கொள்ளிடம் பகுதியில் இரண்டு கோயில்களில் யில் ஆபாச நடன நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த 10 நபா்களுக்கு வியாழக்கிழமை காவல்துறை மூலம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாதல்படுகை நடுதெருவில் சுந்தரவிநாயகா் கோயிலில் விநாயகா்சதுா்த்தியன்று ஆடல், பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஆபாச நடனம் இடம் பெற்ாக கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் போலீஸாா் நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் 5 போ் மீது வழக்குப் பதிந்தனா்.
சீயாளம் கிராமத்தில் காளியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழாவிவையொட்டி இரு தினங்களுக்கு முன் இரவு நடைபெற்ற ஆடல், பாடல் நிகழ்விலும் ஆபாச நடனம் இடம்பெற்ாக போலீஸாா் 5 போ் மீது வழக்குப் பதிந்தனா்.
இரு வழக்குகளிலும் விழா ஏற்பாட்டாளா்கள் 10 பேருக்குத் தலா ரூ.2,500 வீதம் அபராதம் செலுத்த உத்தரவிட்டு வியாழக்கிழமை சீா்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அபராதத் தொகையை செலுத்தினா்.