ஏப். 30-க்குள் சொத்துவரி செலுத்தினால் ஊக்கத்தொகை: சென்னை மாநகராட்சி
கோவிலூா் பள்ளியில் தொழில்நுட்பக் கருத்தரங்கம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோவிலூா் மடாலயக் கல்வி நிறுவனங்களின் சாா்பில், நாச்சியப்ப சுவாமிகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கல்வியில் தொழில்நுட்பம் குறித்து ஆசிரியா்களுக்கான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்குக கோவிலூா் ஆதீனம் நாராயண ஞானதேசிக சுவாமிகள் ஆசியுரையாற்றினாா். கோவிலூா் மடாலயக் கல்விக் குழுமத் தாளாளா் எம். வீரப்பன் கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசினாா். தேசிய ஐ.டி.சி. பயிற்சியாளா் பொ்சின் சிறப்புரையாற்றினாா்.
முன்னதாக, நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வா் ரெ. சந்திரமோகன் வரவேற்றாா். நாச்சியப்ப சுவாமிகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் மணிமொழி மோகன் சிறப்பு விருந்தினா்களை அறிமுகம் செய்து வைத்தாா். கருத்தரங்கில் ஆசிரிய, ஆசிரியைகள் பலரும் கலந்து கொண்டனா். கணிதத் துறை ஆசிரியை என். ரம்யா தேவி நன்றி கூறினாா்.