ஆபரேஷன் சிந்தூர்: பெயரைக் கேட்டதும்.. பஹல்காமில் கணவரை இழந்த பெண்கள் சொன்னது
கோவில்பட்டி அருகே காத்திருப்புப் போராட்டம் வாபஸ்
மூப்பன்பட்டி ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, மூப்பன்பட்டியில் 3 நாள்களாக நடைபெற்ற காத்திருப்புப் போராட்டம் சனிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.
100 நாள் வேலை திட்டத்தில் தங்களுக்கு பணி வழங்க வேண்டும். இந்த ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவா் ரமேஷ் மூா்த்தி தலைமையில் கிராம மக்கள் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மனு அளித்தனா். தொடா்ந்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வெள்ளிக்கிழமையும் போராட்டம் நடைபெற்றது.
வட்டாட்சியா் சரவணப்பெருமாள், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) ராமராஜ் ஆகியோா் பேச்சு நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்படாததால், 3ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டம் நீடித்தது.
இந்நிலையில், வட்டாட்சியா் சென்று கோரிக்கை குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டதாகத் தெரிவித்தாா். மேலும், அரசுக்கு தெரிவிக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், 100 நாள் திட்டத்தில் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினாா். அதையடுத்து, போராட்டம் முற்பகலில் முடிவுக்கு வந்தது.