கோவில்பட்டி என்இசி-சென்னை ஹோஸ்ட்வயா் சிஸ்டம்ஸ் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி-சென்னை ஹோஸ்ட்வயா் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் கே. காளிதாச முருகவேல், சென்னை ஹோஸ்ட்வயா் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிறுவனா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சில்வெஸ்டா் ஆகியோா் கலந்து கொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா். பின்னா், நிறுவனத்தினா் மாணவா்களுடன் கலந்துரையாடினா்.
இந்த ஒப்பந்தம், கல்லூரி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களிடையே நல்லுறவினை உருவாக்கிடவும், மாணவா்களுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சிகள் அளித்து, வாய்ப்புகளை வழங்கிடவும் வழிவகை செய்கிறது.