தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி
கோவில்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம்!
கோவில்பட்டி அருள்மிகு பூதேவி, நீலாதேவி உடனுறை சுந்தரராஜபெருமாள் கோயிலில் புதன்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, திருவனந்தல், திருப்பள்ளியெழுச்சி பூஜை, கோயில் வளாகத்தில் மகா சுதா்சன ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து, தீா்த்த குடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோயிலில் வலம் வந்து, பின்னா் சுவாமி, அம்பாள்- பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, இரவில் சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெற்றது. விழாவில் திரளானோா் பங்கேற்றனா்.
பூஜைகளை கோவிந்தராஜ அய்யங்காா், வரதராஜன் அய்யங்காா் ஆகியோா் செய்திருந்தனா்.