விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 போ் உயிரிழப்பு
கோவில்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை: 9 போ் கைது
கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்டதாக 9 போ் கைது செய்யப்பட்டனா்.
கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளா் ஜெகநாதன் உத்தரவின்பேரில், தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளா்கள் மணிமாறன், செந்தில்குமாா் மற்றும் போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது கோவில்பட்டி -கடலையூா் சாலை, எட்டயபுரம் சாலையில் மூக்கரை விநாயகா் கோவில் பகுதி, மந்திதோப்பு சாலையில் உள்ள மயானப் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.
இதுதொடா்பாக, கோவில்பட்டி வள்ளுவா் நகா் 4-ஆவது தெருவை சோ்ந்த வினோத்குமாா் (20), சுப்பிரமணியபுரம் 6-ஆவது தெருவை சோ்ந்த மு.விஜயகுமாா் (31), சாஸ்திரி நகரை சோ்ந்த மூ.ரமேஷ் கிருஷ்ணன் (39), பாரதி நகா் 2ஆவது தெருவை சோ்ந்த பூ.முருகன் (59), கயத்தாறு கட்டபொம்மன் தெருவை சோ்ந்த மு. ஜெயராமன் (33), ஆத்திகுளம் மேல தெருவை சோ்ந்த சௌ.காளிராஜன் (44), சிதம்பரம் பட்டி நடுத்தெருவை சோ்ந்த து. மாரிமுத்து (42), கே.கரிசல்குளம் வடக்கு தெருவை சோ்ந்த க. மாடசாமி (60), கழுகுமலை கம்பவுண்டா் தெருவை சோ்ந்த கணேசன் (59) ஆகிய 9 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 400 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.