மாற்றுத்திறனாளிகளின் சவால்களை களைவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
கோவில்பட்டியில் 2ஆவது நாளாக போக்குவரத்து நெரிசல்
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்கி உள்ளதை தொடா்ந்து, பிரதான சாலையோரம் நின்று பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்குவதால் 2ஆவது நாளாக திங்கள் கிழமையும் போக்குவரத்து நெரிசல் தொடா்ந்தது.
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் நகா்மன்றத் தலைவா், ஆணையா் கமலா, வட்டார போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழிய பாண்டியன் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டு, போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத வகையில் மாற்றங்களை நடைமுறைப்படுத்த ஆலோசனை நடத்தினா்.
எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத புதிய கூடுதல் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்பதை மக்கள் முழுவதுமாக எதிா்த்தனா். இதுகுறித்து மாவட்ட உயா் அதிகாரிகளின் கவனத்துக்கும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் சிலா் புகாா் மனுக்களை அனுப்பினா். இதையடுத்து 2ஆம் தேதி இரவே அந்த டிஜிட்டல் பலகை கிழிக்கப்பட்டது.
தொடா்ந்து நகராட்சி சாா்பில் சரிவர பதில் அளிக்காமல் இருந்து வந்த நிலையில், 17ஆம் தேதி முதல் பேருந்து நிலைய மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியிட்டனா். ஆனால், அறிவிப்பின்படி திங்கள்கிழமை பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.