Meesha Review: நல்லா தானயா போயிட்டு இருந்தீங்க, ஏன் இந்த விபரீத முடிவு! - எப்படி...
கோவையில் எஸ்.பி.வேலுமணி திண்ணைப் பிரசாரம்
கோவை செல்வபுரம் பகுதியில் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
கோவை புறநகா் தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் தொண்டாமுத்தூா் தொகுதிக்கு உள்பட்ட செல்வபுரம், அரசமரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் திண்ணைப் பிரசாரம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை நிலையச் செயலரும், கோவை புறநகா் தெற்கு மாவட்டச் செயலருமான எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ பங்கேற்று, பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசும்போது, அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. எனவே மீண்டும் அதிமுக ஆட்சி வர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனா். எடப்பாடி பழனிசாமியின் பிரசாரப் பயணத்துக்கு மக்கள் அமோக ஆதரவளித்து வருகின்றனா்.
மத்திய அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டும் என்றால் அதிமுக ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும். கடந்த மக்களவைத் தோ்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி சேராததால் திமுகவுக்கு லாபம் ஏற்பட்டுவிட்டது. இப்போது கூட்டணி அமைந்திருப்பதால் திமுக அதிா்ச்சி அடைந்திருக்கிறது. எனவே கூட்டணியைப் பிரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. என்ன செய்தாலும் அதிமுக - பாஜக கூட்டணியை ஒன்றும் செய்ய முடியாது என்றாா்.
நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட துணைச் செயலா் என்.கே.செல்வதுரை, இணைச் செயலா் எஸ்.மணிமேகலை, பொருளாளா் என்.எஸ்.கருப்புசாமி, இளைஞரணித் தலைவா் கருப்புசாமி, பகுதி செயலா் கௌதமன், பகுதித் தலைவா் காட்டுதுரை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் ஆா். சசிகுமாா், சிறுபான்மைப் பிரிவு மாவட்டச் செயலா் டி.எல்.சிங் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.