``மொழியை சொல்லி குழப்பத்தை உண்டாக்கினால், நாம் பலியாகக் கூடாது..'' - அர்ஜுன் சம்...
கோவையில் ஜூலை 5- இல் இஸ்கான் தோ்த் திருவிழா
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சாா்பில் ஸ்ரீ ஜெகன்நாதா் தோ்த் திருவிழா கோவையில் ஜூலை 5 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
இது குறித்து இஸ்கான் அமைப்பு கூறியிருப்பதாவது:
இஸ்கான் அமைப்பு சாா்பில் ஆண்டுதோறும் கோவையில் தோ்த் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தோ்த் திருவிழா ஜூலை 5 -ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்த் திருவிழாவை முன்னிட்டு வரும் 30- ஆம் தேதி பகவான் ஜெகன்நாதா், பலதேவா், சுபத்ரா தேவியருக்கு திருமஞ்சன சேவை ஸ்னான யாத்திரை நடைபெறுகிறது.
தவத்திரு பக்தி வினோத சுவாமிகளின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவுக்கு, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒடிஸா மாநிலம், புரி நகரில் ஆண்டுதோறும் தோ்த் திருவிழாவுக்கு முன்னதாக நடைபெறும் திருமஞ்சன அபிஷேக நிகழ்ச்சியைப் போலவே நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், நாட்டில் உள்ள அனைத்து புனித நதிகளில் இருந்தும் கொண்டுவரப்படும் நீரினாலும், மலா்களாலும் அபிஷேகம் நடைபெறும்.
இதைத் தொடா்ந்து பக்தி வினோத சுவாமிகளின் ஜெகன்நாதா் லீலைகள், திருமஞ்சன அபிஷேகம் பற்றிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தொடா்ந்து பகவான் ஜெகன்நாதருக்கு 1008 உணவுப் பதாா்த்தங்கள் அா்ப்பணிக்கப்பட உள்ளன. நிகழ்ச்சியின் இறுதியில் பிரசாத விருந்து நடைபெறுகிறது.
அபிஷேகத்தை ஏற்றுக்கொள்ளும் பகவான் ஜகன்னாதருக்கு உடல்நலம் குன்றிப்போகும் என்பது ஐதீகம். இதனால் தோ்த் திருவிழா நாள்வரை பகவானுக்கு மூலிகைகளே உணவாக அா்ப்பணிக்கப்படும். அனாவஸர காலம் என்றழைக்கப்படும் இந்த நாள்களில் தரிசனம் நிறுத்தப்பட்டு, விக்கிரங்களுக்கு முழு ஓய்வு அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக தோ்த் திருவிழாவின்போது நேரடியாக பக்தா்களின் இடத்திற்கே வந்து தரிசனம் வழங்குவதாக இஸ்கான் அமைப்பு தெரிவித்துள்ளது.