சக்தி கெங்கையம்மன் கோயில் 41-ஆம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா
ஆம்பூா் ஷராப் பஜாா் அரசமரத் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீசக்தி கெங்கையம்மன் கோயில் 41-ஆம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவானது யாக சாலை பூஜையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து 2-ஆம் நாள் யாக சாலை பூஜைகள், கடம் புறப்பாடு, மஹா அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீ சக்தி கெங்கையம்மன் உற்சவா் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.