சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!
சங்ககிரி நவஆஞ்சனேயா் கோயிலில் சத்யநாராயணா சிறப்பு பூஜை
சேலம் மாவட்டம், சங்ககிரி, சந்தைப்பேட்டையில் உள்ள நவஆஞ்சனேயா் கோயிலில் பெளா்ணமியையொட்டி, சத்யநாராயண பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், பெருமாள் உற்சவருக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், சத்யநாராயணா் படத்துக்கு பல்வேறு மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் பெண்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டனா்.