சங்கர மடத்தில் 108 சுமங்கலிகள் பூஜை
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நவராத்திரி திருவிழாவையொட்டி 108 சுமங்கலிகள் பூஜை மற்றும் கன்னிகா பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுடன் நவராத்திரித் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. 2ஆவது நாள் நிகழ்வாக செவ்வாய்க்கிழமை உலக மக்கள் நன்மைக்காகவும், அனைத்து உயிரினங்களும் ஆரோக்கியமாக வாழவும் 108 சுமங்கலிகள் மற்றும் 108 குழந்தைகளுக்கான கன்னிகா பூஜை நடைபெற்றது.
பூஜைகளை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்தானீகா்கள் செய்தனா். சங்கர மடத்தின் மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன், நிா்வாகி கீா்த்தி வாசன், கோயில் மணியக்காரா் சூரியநாராயணன் கலந்து கொண்டனா்.