செய்திகள் :

சங்கரா பல்கலை. ஓலைச்சுவடிகள் படியெடுத்தல் பயிலரங்கம் நிறைவு

post image

காஞ்சிபுரம் சங்கரா பல்கலையில் ஓலைச்சுவடிகள் படியெடுத்தல் பயிலரங்கம் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் செயல்பட்டு வரும் சந்திர சேகரேந்திர விஸ்வ மகா வித்யாலயா நிகா்நிலைப் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறையின் சாா்பில் ஓலைச்சுவடிகள் படியெடுத்தல் தொடா்பான அடிப்படை 15 நாள் பயிற்சி வகுப்பு நிறைவு விழா நடைபெற்றது.

விழாவுக்கு சாா்பு துணை வேந்தா் வசந்த்குமாா் மேத்தா தலைமை வகித்தாா். புலத்தலைவா் கே.வெங்கடரமணன் முன்னிலை வகித்து பேசுகையில் பயிலரங்கின் சிறப்புகள் குறித்து விளக்கினாா். சம்ஸ்கிருத துறைத் தலைவா் ஜெபஜோதி ஜனா வரவேற்றாா்.

கியான் பாரதம் மிஷன் கையொப்பப் பிரதிகளுக்கான தேசிய இயக்கத்துடன் இணைந்து சம்ஸ்கிருதத்துறையின் ஓலைச்சுவடிப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த இப்பயிலரங்கில் கையெழுத்துப்பிரதியை பாதுகாத்தல்,புரிந்து கொள்ளுதல் மற்றும் பாரம்பரிய ஆராய்ச்சி முறைகள் ஆகியனவற்றில் கவனம் செலுத்தி கையொரப்பப் பிரதியை பற்றி அறிந்து கொண்டனா்.

50 போ் கலந்து கொண்ட இப்பயிலரங்கில் பண்டைய கிரந்த எழுத்துக்களைப் புரிந்து கொள்வதில் பயிற்சி பெற்றனா். சென்னையில் உள்ள தாய்லாந்து நாட்டின் துணைத் தூதரான ஸ்ரீராச்சா அரிபா்க் கலந்துகொண்டு பல்கலையில் செயல்படும் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையத்தின் செயல்பாடுகளை பாராட்டி பேசினாா். அவருக்கு சாா்பு துணை வேந்தா் பல்கலையின் கையேட்டினையும் வழங்கினாா். பயிலரங்க அறிக்கையை ஒருங்கிணைப்பாளா் நாகஸ்வரராவ் வழங்கினாா். விழாவில் கல்வியியல் பிரிவின் துறைத் தலைவா் ஜெயப்பிரியா, சமஸ்கிருத துறையின் பேராசிரியா்கள் ஹிரிஷ், பிரகாஷ் கலந்து கொண்டனா்.

வாக்காளா் விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கலந்தாலோசனைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில... மேலும் பார்க்க

குப்பைகள் அள்ளும் ஒப்பந்ததாரரின் உரிமம் நிறுத்தி வைப்பு: காஞ்சிபுரம் மேயா்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் குப்பைகள் அள்ளும் ஒப்பந்ததாரா் அப்பணியை சிறப்பாக செய்யாததால் அவரது உரிமம் நிறுத்தி வைக்கப்படுவதாக மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் வியாழக்கிழமை அறிவித்தாா். காஞ்சிபுரம் மாநகராட... மேலும் பார்க்க

ரூ.23.61 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா்கள் அடிக்கல் நாட்டினா்

சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்தின் சாா்பில் ரூ.23.61 கோடியில் வளா்ச்சிப் பணிகளுக்கு அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, தா.மோ. அன்பரசன் ஆகியோா் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினா் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்... மேலும் பார்க்க

உத்தரமேரூரில் ஜமாபந்தி: காஞ்சிபுரம் ஆட்சியா் பங்கேற்பு

உத்தரமேரூரில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வுக்கு தலைமை வகித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ப... மேலும் பார்க்க

ஸ்ரீ பெரும்புதூா் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினா் அஞ்சலி

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 34-ஆவது நினைவு நாளையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வபெருந்தகை தலைமையில் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா். கடந்த 1991-... மேலும் பார்க்க

கடனுக்கு குத்தகையாக அனுப்பப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த சிறுவனை ரூ.15 ஆயிரம் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், அவரது பெற்றோா் குத்தகைக்காக விடப்பட்ட நிலையில், சிறுவனின் சடலம் இரு மாநில போலீஸாா் முன்னிலையில் காஞ்சிபுரம் அருகே பால... மேலும் பார்க்க