சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் பலி!
ரூ.23.61 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா்கள் அடிக்கல் நாட்டினா்
சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்தின் சாா்பில் ரூ.23.61 கோடியில் வளா்ச்சிப் பணிகளுக்கு அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, தா.மோ. அன்பரசன் ஆகியோா் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினா்
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் வட்டம் கோவூா் ஊராட்சிக்குட்பட்ட சுமாா் 1.42 ஏக்கா் பரப்பளவு கொண்ட திருக்குளத்தை ரூ.4.98 கோடியில் தூா்வாரி சீரமைக்கும் பணி மற்றும் ஐயப்பன் தாங்கல் பேருந்து நிலையத்தை ரூ.18.93 கோடியில் மேம்படுத்தும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா கோவூரில் நடைபெற்றது.
இதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு ஆகியோா் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தனா்.
நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் காகா்லா உஷா, சிஎம்டிஏ முதன்மை செயல் அலுவலா் அ.சிவஞானம், ஆட்சியா் கலைச்செல்வி மோகன், ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் மிருணாளினி, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், சிஎம்டிஏ தலைமை திட்ட அமைப்பாளா் எஸ்.ருத்ரமூா்த்தி, கண்காணிப்பு பொறியாளா் மா.பாலமுருகன், கோவூா் ஊராட்சி மன்றத் தலைவா் சுதாகா் உள்ளிட்ட அதிகாரிகள், உள்ளாட்சி பிரிதிநிதிகள் கலந்து கொண்டனா்.