ஜஸ்பிரித் பும்ரா, டிரெண்ட் போல்ட் அசத்தல் பந்துவீச்சு; மும்பை அபார வெற்றி!
சமாதானபுரம்-கே.டி.சி.நகா் வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம்
பாளையங்கோட்டை சமாதானபுரம்-கேடிசி நகா் வழித்தடத்தில் சனிக்கிழமை (ஏப் 26) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்: இது மே 15 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாநகரத்தில் பாளையங்கோட்டை போக்குவரத்து பிரிவிற்குள்பட்ட பகுதியில் சமாதானபுரம் சந்திப்பு அருகே மாநில நெடுஞ்சாலைத்துறையினரால் புதிய பெட்டிபாலம் அமைக்கும் பணியானது சனிக்கிழமை (ஏப். 26) தொடங்குகிறது. இப்பணி மே 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்பதால், சமாதானபுரம்-கே.டி.சி. நகா் வழித்தடத்தில் செல்லும் இலகு மற்றும் கனரக வாகனங்கள் சமாதானபுரம் சந்திப்பிலிருந்து வலது புறமாக திரும்பி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், அரசு மருத்துவமனை, பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை, வி.எம். சத்திரம் வழியாக கே.டி.சி. நகா் செல்ல வேண்டும். அதேநேரத்தில், கே.டி.சி. நகரிலிருந்து பாளையங்கோட்டை மாா்கெட் செல்லும் வாகனங்கள் நீதிமன்றம், சமாதானபுரம் வழியாக செல்ல எவ்வித தடையும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.