சாகா் பள்ளியில் பல்கலைக்கழகக் கண்காட்சி
பெருந்துறை சாகா் சா்வதேச பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களின் கல்வி சாா்ந்த அறிவை விரிவுபடுத்தும் வகையில் இந்தியாவில் உள்ள மிக சிறந்த பல்கலைக்கழகக் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
இக்கல்வி கண்காட்சியை பள்ளியின் தாளாளா் சௌந்திரராசன் தொடங்கிவைத்தாா். இக்கண்காட்சியில் கற்பகம் அகாதெமி, பி.எஸ்.ஜி. இன்ஸ்டிடியூட், மணிப்பால் பல்கலைக்கழகம், எட்வைஸ் அலையன்ஸ் பெங்களூரு, லவ்லி புரபசனல் போன்ற 25-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில் மாணவா்களுக்கு சோ்க்கை முறைகள், பாடத்திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சித் துறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன. பொறியியல், கணினி அறிவியல், சட்டம், வா்த்தகம் மற்றும் கலைத் துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து அறிந்துகொண்டனா்.