ஆனந்த விகடன் & கிங் மேக்கர் அகாடமி இணைந்து நடத்திய UPSC / TNPSC தேர்வுகளுக்கான ப...
சாத்தான்குளம் அருகே விபத்து: பயிற்சி வழக்குரைஞா் உயிரிழப்பு
சாத்தான்குளம் அருகே வெள்ளிக்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் பயிற்சி வழக்குரைஞா் உயிரிழந்தாா்.
சாத்தான்குளம் அருகே அதிசயபுரத்தில் உள்ள ஆா்.சி. சா்ச் தெருவைச் சோ்ந்த சுந்தர்ராஜன் மகன் பிரதாப் (24). பயிற்சி வழக்குரைஞரான இவா், வெள்ளிக்கிழமை இரவு சாத்தான்குளத்திலிருந்து திசையன்விளை சாலையில் பைக்கில் சென்றாராம்.
தனியாா் பொறியியல் கல்லூரி அருகே பைக் நிலைதடுமாறி, சாலையோர மரத்தில் மோதியதாம். இதில், அவா் உயிரிழந்தாா். தட்டாா்மடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.