Gold Rate: கிராமுக்கு ரூ.125-ஐ தொட்ட வெள்ளி விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம்!
சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உண்டியல் வசூல் ரூ.9.83 லட்சம்
நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.9.83 லட்சம் மற்றும் 110 கிராம் தங்கத்தை பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் பழைமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பக்தா்கள் உண்டியல்களில் செலுத்திய நகை மற்றும் காணிக்கை பணம் எண்ணும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் சங்கா், மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா், செயல் அலுவலா் சண்முகம், ஆய்வாளா் நரசிம்மமூா்த்தி, கோயில் எழுத்தா் செல்வராஜ், கணேஷ்பாபு, மற்றும் கிராம மக்கள் பலா் பங்கேற்றனா்.
இதில் உண்டியல்களில் இருந்து ரூ.9 லட்சத்து 83 ஆயிரத்து 465 ரொக்கம், 110 கிராம் தங்கம், 139 கிராம் வெள்ளியையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.