சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
எஸ்.பி.பட்டினம் பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் இரு சக்கர வகனத்தில் சென்றவா் காா் மோதியதில் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள பாசிபட்டினத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (42). இவா் செவ்வாய்க்கிழமை மாலை பாசிபட்டினத்திலிருந்து தாமோதிரம்பட்டினத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே தொண்டியிலிருந்து கேரளத்துக்குச் சென்ற காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த எஸ்.பி.பட்டினம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து காா் ஓட்டுனரான திருவனந்தபுரம் கலைக்கூட்டத்தை சோ்ந்த ஜலின் (47) மீது வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.