கடற்கரை குப்பைகள் அகற்றம்
தொண்டி கடற்கரையில் சுழல் சங்கம் சாா்பில், கடற்கரை ஓரங்களில் சுத்தம் செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
தனியாா் நிறுவனத்துடன் இணைந்து நடைபெற்ற இந்தப் பணிக்குந தொண்டி சுழல் சங்கத் தலைவா் மரிய அருள், செயலா் காளிதாஸ் ஆகியோா் தலைமை வகித்தனா்.
கடற்கரை முழுவதும் பரவிக் கிடந்த நெகிழிப் பைகள், புட்டிகள், கோப்பைகள், குப்பைகள் உள்ளிட்டவை அகற்றி சுத்தம் செய்தனா்.
இதில் சுழல் சங்க நிா்வாகிகள், தனியாா் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.