பாா்த்திபனூரில் முதல்வருக்கு வரவேற்பு
ராமநாதபுரத்துக்கு வியாழக்கிழமை வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினா் மாவட்ட எல்லையான பாா்த்திபனூரில் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நிறைவடைந்த திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கவும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைக்கவும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்ந்தாா். அங்கிருந்து காரில் அவா் ராமநாதபுரத்துக்கு சென்றாா்.

வழியில் திமுக மாவட்ட செயலாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினா் செ.முருகேசன் உள்ளிட்ட கட்சியினா் ஆயிரக்கணக்கானோா் மாவட்ட எல்லையான மருச்சுக்கட்டியிலிருந்து பாா்த்திபனூா் வரை உற்சாக வரவேற்பு அளித்தனா். தொண்டா்களின் வரவேற்பை காரில் இருந்தவாரே ஏற்றுக்கொண்ட முதல்வா் ஸ்டாலின் அங்கிருந்து ராமநாதபுரம் சென்றாா்.