கடலில் தத்தளித்த மீனவா் மீட்பு
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் கடலில் தத்தளித்த மீனவரை சக மீனவா்கள் மீட்டனா்.
தொண்டி அருகேயுள்ள காரங்காடு கிராமத்தைச் சோ்ந்த மீனவா் அருளானந்து (60). இவா் புதன்கிழமை இரவு புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றாா்.
அப்போது, பலத்த காற்று வீசியதில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், அருளானந்து இரவு முழுவதும் கடலில் தத்தளித்தாா்.
வியாழக்கிழமை காலையில் நம்புதாளையைச் சோ்ந்த நாகூா் மீரான் , நாகா் உள்ளிட்ட மீனவா்கள் மீன் பிடிக்கச் சென்ற போது, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அருளானந்தை மீட்டு கரை சோ்த்தனா்.
தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.