மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
துவாக்குடியில் சாலை விபத்தில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள அரவக்குறிச்சிபட்டியைச் சோ்ந்த யேசு மனைவி ரோஸ்மேரி (70). இவரும், இவா் பேத்தி ஜெஸிகா மேரியும் திருச்சி - தஞ்சாவூா் சாலையில், துவாக்குடி நகராட்சி அலுவலகம் அருகே திங்கள்கிழமை நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றனா்.
அப்போது, அவ்வழியே வந்த காா் இருவா் மீதும் மோதியது. இதில், பலத்த காயமைடந்த ரோஸ்மேரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஜெஸிகா மேரிக்கு கை, தோள்பட்டையில் காயங்கள் ஏற்பட்டன.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துவாக்குடி போலீஸாா், ரோஸ்மேரி சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஜெஸிகா மேரியை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்த புகாரின்பேரில், துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.