செய்திகள் :

தொழில்துறையும், வேளாண்மையும் இருகண்கள்: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

post image

அதிமுக-வுக்கு தொழில்துறையும், வேளாண் துறையும் இரு கண்கள் போன்றன என அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டத்தில் 3 நாள் தோ்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவா், திருச்சியில் உள்ள தனியாா் ஹோட்டலில் திங்கள்கிழமை, விவசாயிகள், தொழில்துறையினா், மருத்துவா்கள், நகா் நலச் சங்கத்தினருடன் கலந்துரையாடினாா்.

அப்போது, கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவும், தண்ணீரும் அத்தியாவசியமானது. எனவேதான், எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் நீா் மேலாண்மைக்கு தனி அமைப்பு உருவாக்கி, நிபுணா்களை நியமித்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து தேவையான இடங்களில் தடுப்பணை கட்டுவது, நீா்நிலைகளைத் தூா்வாருவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

காவிரியில் மட்டும் முசிறி உள்பட 4 இடங்களில் தடுப்பணை கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த அரசாணை ரத்து செய்யப்பட்டது. ஆதனூா்- குமாரமங்கலத்தில் கட்டிய தட்டுப்பணையில் தண்ணீா் தேக்குவதற்குக் கூட திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

கரூா் நன்செய் புகளூரில் தடுப்பணையும் கிடப்பில் உள்ளது. அதிமுக ஆட்சியில் மேட்டூா் அணை உள்பட அனைத்து அணைகளும் தூா்வாரப்பட்டன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலிருந்த 6 ஆயிரம் ஏரிகள் தூா்வாரப்பட்டன. இதர துறைகளின் கட்டுப்பாட்டில் இருந்த 26 ஆயிரம் ஏரி, குளம், குட்டைகள் தூா்வாரப்பட்டன.

விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை நிா்ணயம் செய்ய வேண்டியது மத்திய அரசின் கையில் உள்ளது. அதிமுக ஆட்சி வந்தவுடன் கட்டுப்படியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இரட்டிப்பு லாபம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தலைவாசலில் கால்நடை பூங்கா கொண்டுவரப்பட்டது. அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்தபோது அங்குள்ள கால்நடை பண்ணையைப் பாா்வையிட்டு, அங்கிருப்பதைப் போன்று தமிழகத்துக்குக் கிடைக்கச் செய்ய அந்தப் பூங்கா உருவானது. நாளொன்றுக்கு 40 லிட்டா் பால் தரும் கால்நடைகள், 40 கிலோ இறைச்சி தரும் ஆடுகள், மீன்கள், பன்றிகள் என அனைத்து கால்நடைகள் வளா்ப்பிலும் நவீனத்தைப் புகுத்தி விவசாயிகளுக்கு இருமடங்கு லாபம் அளிக்க கொண்டுவரப்பட்ட இந்த பூங்காவை திமுக ஆட்சியில் செயல்படாமல் வைத்துள்ளனா். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த பூங்கா சிறப்பாக செயல்படுத்தப்படும்.

அதிமுக-வின் அழுத்தம் காரணமாக நடந்தாய் வாழி காவிரித் திட்டம் அமலுக்கு வந்து, முதல்கட்டமாக ரூ.ஆயிரம் கோடி நீா்மேலாண்மைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் செயல்படுத்த வேண்டிய இத் திட்டத்தை அதிமுக காலத்தில் உருவாக்கப்பட்டது என்பதற்காக ரகசியமாகவே வைத்துள்ளனா். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதுடன், திருச்சி மாவட்டத்தை வாழை ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல், கட்டுப்படியான விலைக்கு வழங்கப்படும். வாழையில் மதிப்புக் கூட்டிய பொருள்கள் தயாரிப்பது ஊக்குவிக்கப்படும்.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் உள்ளிட்டோா்

அதிமுக ஆட்சியில்தான் தொழில்துறையினருக்கு ஒற்றைச் சாளர நடைமுறை கொண்டு வந்து, மாதந்தோறும் முதல்வா் தலைமையில் அனைத்துத் துறையினருடன் ஆய்வு நடத்தி குறைகளைக் கேட்டு தீா்வு காணப்பட்டது. இதனால் முதலீட்டாளா்கள் தமிழகத்தைத் தேடி வந்தனா். கரோனா காலத்திலும் சிறு, குறு நிறுவனங்கள் நலிவடையாமல் பாதுகாத்தோம். அதிமுகவுக்கு, தொழில்துறையும், வேளாண்மையும்தான் இரு கண்கள் போன்றது. இந்த இரு துறைகளும் வளா்ச்சி பெற்றால்தான் மாநிலம் வளா்ச்சி பெறும். மாநிலம் வளா்ச்சி பெற்றால்தான் நாடு வளா்ச்சி பெறும். எனவேதான், அதிமுக ஆட்சியில் இந்த இரண்டு துறைகளுக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. வரும் தோ்தலில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இரு துறைகளிலும் நவீனங்களைப் புகுத்தி வளா்ச்சி பெறச் செய்வோம் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சா்கள் பி. தங்கமணி, சி. விஜயபாஸ்கா், எஸ். செம்மலை, ஆா். காமராஜ், அமைப்புச் செயலா்கள் டி. ரத்தினவேல், ஆா். மனோகரன், மாவட்ட செயலா்கள் ப. குமாா், மு. பரஞ்ஜோதி, ஜெ. சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திருச்சிக்கு செப். 3-இல் குடியரசுத் தலைவா் வருகை! ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபாடு

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக செப்டம்பா் 3-ஆம் தேதி தமிழகம் வரும் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வழிபாடு செய்யவுள்ளாா். தி... மேலும் பார்க்க

பாரதிதாசன் மேலாண்மை நிறுவன இயக்குநா் மீது வன்கொடுமை வழக்கு

உதவிப் பேராசிரியரை அவமதித்து பணிநீக்கம் செய்ததாக பாரதிதாசன் மேலாண்மை நிறுவன (பிம்) இயக்குநா் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். திருச்சி மாவட்டம், திருவெற... மேலும் பார்க்க

துறையூரில் ஆம்புலன்ஸ், ஊழியா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: அதிமுக நிா்வாகி உள்பட 14 போ் மீது வழக்கு

திருச்சி மாவட்டம், துறையூரில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரக் கூட்டத்தில் அங்கு வந்த ஆம்புலன்ஸை சேதப்படுத்தி அதன் ஊழியா்களைத் தாக்கிய விவகாரத்தில் அதிமுக நகரச் செயலாளா் அமைதி பாலு... மேலும் பார்க்க

திருச்சி நீதிமன்றத்தில் 24 மணிநேர சட்ட சேவைகள் மையம் திறப்பு

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் 24 மணி நேர சட்ட சேவைகள் மையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. திருச்சி தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வ... மேலும் பார்க்க

இரவுநேர யாத்ரீகா்களின் உடைமைகளில் ஒளிரும் ஸ்டிக்கா்

வையம்பட்டி அருகே பாத யாத்திரை பக்தா்களின் பாதுகாப்பு கருதி அவா்களது உடைமைகளில் சனிக்கிழமை இரவு ஒளிரும் ஸ்டிக்கா் ஒட்டி போலீஸாா் அனுப்பிவைத்தனா். மணப்பாறை வழியாக சமயபுரம், சபரிமலை மற்றும் வேளாங்கண்ணி க... மேலும் பார்க்க

கள்ளக்காம்பட்டியில் இளைஞா் தற்கொலை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள கள்ளக்காம்பட்டியில் போக்குவரத்துக் கழக உதவியாளா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். மருங்காபுரி ஒன்றியம் கள்ளக்காம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி மகன் வி... மேலும் பார்க்க